இன்றைய தலைமுறையினர் தவறவிடக்கூடாத ஜானகியம்மாவின் 10 பாடல்கள் இதோ:
- 1991ஆம் ஆண்டில் இளையராஜா – ரஜினி – வைரமுத்து ஆகியோரின் கூட்டணியில் வெளியான ‘தளபதி’ படத்தில், ‘சின்னத் தாய் அவள்’ என்ற பாடலை ஜானகியம்மா பாடியிருப்பார். சிறு வயதில் தொலைத்து, முதுமையில் தனது குழந்தையை தேடும் தாயின் குரலில் ஒரு மென்சோகத்துடன் ஜானகியம்மா இந்த பாடலை பாடியிருப்பார்.
- 2014ஆம் ஆண்டில் தனுஷ் நடிப்பில், அனிருத் இசையில் உருவான ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் வரும் ‘அம்மா, அம்மா… நீ எங்க அம்மா’ பாடலில், இறந்த பின்னர் தனது மகனை ஆற்றுப்படுத்தும் தாயின் குரலாக ஜானகியம்மா பாடியிருப்பார். தாயை இழந்த மகன்களுக்கு என்னென்றும் ஜானகியம்மாவின் குரல் மனதை வருடிக்கொடுக்கும்.
- 1998ஆம் ஆண்டில் மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவான ‘உயிரே’ படத்தில் வரும் இந்த ‘நெஞ்சினிலே, நெஞ்சினிலே’ பாடல், காதலில் தவித்து, கல்யாணக் கனவில் மூழ்கியிருக்கும் இளம் பெண்ணின் ஏக்கத்திற்கு ஜானகியம்மா உயிரூட்டியிருப்பார்.
- 1985ஆம் ஆண்டில் பாரதிராஜா – இளையராஜா கூட்டணியில் உருவான ‘முதல் மரியாதை’ படத்தில் ‘பூங்காற்று திரும்புமா’, ‘வேட்டி வேறு வாசம்’ உள்ளிட்ட 2 பாடல்களை ஜானகியம்மா பாடியிருப்பார். இதில் சின்னச்சாமியும் (சிவாஜி கணேசன்), குயிலும் (ராதா) முன்னரே அறிமுகமாகியிருப்பார்கள். ஆனால், ஒரு பக்கம் சிவாஜி கணேசன் தனது தனிமையை எண்ணி சோகமாக பாட ஆரம்பிக்க, அதற்கு ராதா ஆறுதல் அளித்து பாடுவார். ‘சுக ராகம் சோகம் தானே…’ காயம்பட்ட மனதுக்கு மருந்து அளிக்கும் குரலில் ஜானகி, சின்னச்சாமியின் மொத்த சோகத்தையும் தனிமையையும் போகியிருப்பார்.
- 1980ஆம் ஆண்டில் மகேந்திரன் இயக்கத்தில், இளையராஜா இசையில் வெளியான ‘ஜானி’ படத்தில் முக்கியமான கட்டத்தில் வரக்கூடிய பாடல் ‘காற்றில் எந்த கீதம்’. ரஜினி, ஸ்ரீதேவி ஆகியோரின் காதல் இந்த திரைப்படம் முழுவதும் நிரம்பியிருக்கும்.அப்படியிருக்க பாடகியான ஸ்ரீதேவி (அர்ச்சனா), தனது காதலன் ரஜினி (ஜானி) எப்போது திரும்பி வருவான் என்ற ஏக்கத்துடனும், தங்களின் காதல் தருணங்களை நினைவில்கொண்டு சோகத்தின் உச்சியில் காதலி பாடும் இடங்களை ஜானகி அருமையாக தொட்டிருப்பார். நிச்சயம் படத்தில் ஸ்ரீதேவி கதாபாத்திரன் சோகத்தை புரிந்துகொள்ள இந்த பாடலை நீங்கள் கேட்டலே போதும்.
- 1993ஆம் ஆண்டு பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வெளியான ‘மறுபடியும்’ படததில் வெளியான ‘ஆசை அதிகம் வச்சு…’ பாடல் இன்றுவரை பெண்கள் மத்தியில் கொண்டாட்டத்திற்கான பாடலாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- காதல், சோகம், தாய்மை உள்ளிட்ட உணர்வுகளை தாண்டி பெண்களுக்கான கொண்டாட்ட உணர்வை ஜானகி இந்த பாடலில் வெளிக்காட்டியிருப்பார். ‘சின்னப்பொண்ணு நான்… செந்தூரப்பூ நான்…’, ‘இது தேன் சிந்தும் பூஞ்சோலை தான் என் செல்லகுட்டி’ என ஒரு பெண்ணின் கர்வத்தோடு கவித்துவமாக பாடியிருப்பார்.
- 1978ஆம் ஆண்டில் பாரதிராஜா, இளையராஜா கூட்டணியில் உருவான ‘சிகப்பு ரோஜாக்கள்’ படம் நவீன வாழ்க்கையை காட்டும் விதத்தில் அமைந்திருக்கும். அதில் ‘நினைவோ ஒரு பறவை’ பாடல் காதலன் – காதலி தங்களின் அன்யோன்யத்தை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளும் பாடலாக அமைந்திருக்கும்.அதில் பாடகர் கமல்ஹாசன் ஒரு பக்கம் தனது குரலால், நடிகர் கமல்ஹாசனின் கதாபாத்திரத்தை காதலின் உச்சத்திற்கு கொண்டு சென்றுகொண்டிருக்க, மறுபக்கம் காதலியின் காதல் வேட்கையை தனது குரலில் வெளிப்படுத்தி ஜானகியம்மா, கமலுக்கு கடும் போட்டியை அளித்திருப்பார்.மிகவும் அரிய கமல் – ஜானகி கூட்டணியில் உருவான பாடல்களில் இது முதன்மையானது எனலாம். கண்மணி அன்போடு காதலன், இஞ்சி இடுப்பழகா உள்ளிட்டவையும் உள்ளன.
- 1999ஆம் ஆண்டில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான ‘சங்கமம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மார்கழி திங்கள் அல்லவா’ பாடலில் ஜானகி பாடியிருப்பார்.பாரம்பரியமான பரதநாட்டியத்தில் சிறந்துவிளங்கும் நாயகி, தனது காதலன் சிறந்து விளங்கும் கிராமிய இசையின் மீது தான் கொண்ட காதலை வெளிப்படுத்தும் வகையில் எழுதப்பட்டிருக்கும். அந்த கதாபாத்திரன் மொத்த உணர்ச்சிக் குவியலையும் தனது குரலில் வசப்படுத்திப் பாடியிருப்பார் ஜானகி.
- 1999ஆம் ஆண்டில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான ‘ஜோடி’ திரைப்படத்தில் ‘காதல் கடிதம் தீட்டவே’ பாடலை எஸ்.ஜானகி பாடியிருப்பார். உன்னி மேனன் அசத்தலாக பாடியிருந்தாலும், அவரை மிஞ்சும் அளவுக்கு ஜானகி இந்த பாடலில் பாடியிருப்பார். ஜானகியின் குரல்தான் இந்த பாடலையே அடுத்தத் தளத்திற்கு கொண்டுச்சென்றிருக்கும்.
- 1962ஆம் ஆண்டு ஜெமினி கணேசன் – சாவித்ரி இணைந்து நடிப்பிலும், விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையிலும் வெளியான ‘பாத காணிக்கை’ படத்தில் இடம்பெற்ற பாடல்தான், ‘பூஜைக்கு வந்த மலரே வா’. மறைந்த பழம்பெரும் பாடகர் பி.பி. ஸ்ரீனிவாஸ் உடன் இணைந்து ஜானகி பாடியிருப்பார்.
எஸ் ஜானகி பாடிய ஜோடிப் பாடல்களில் சில முத்தான பாடல்கள் :
1. சித்திரமே நில்லடி முத்தமிட்டால் என்னடி – வெண்ணிற ஆடை
2. எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதிலென்ன – சுமைதாங்கி
3. பூஜைக்கு வந்த மலரே வா – பாதகாணிக்கை
4. மாம்பழத்து வண்டு – சுமைதாங்கி
5. ஆண்டொன்று போனால் – போலீஸ்காரன் மகள்
6. இந்த மன்றத்தில் ஓடிவரும் – போலீஸ்காரன் மகள்
7. சின்னஞ்சிறிய வண்ணப் பறவை – குங்குமம்
8. கூந்தலிலே நெய் தடவி – கல்யாண ஊர்வலம்
9. காலத்தை வென்றவன் நீ – அடிமைப் பெண்
10. நீல நிறம் வானுக்கும் – என் அண்ணன்
11. அழகுக்கு மறு பெயர் பெண்ணா – அன்னமிட்ட கை
12. ஆனந்தம் இன்று ஆரம்பம் – இதய வீணை
13. உலகம் அழகு கலைகளின் சுரங்கம் – உலகம் சுற்றும் வாலிபன்
14. கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் – சிரித்து வாழ வேண்டும்
15. அங்கே வருவது யாரோ – நேற்று இன்று நாளை
16. தேன் சிந்துதே வானம் – பொண்ணுக்கு தங்க மனசு
17. சொல்லத்தான் நினைக்கிறேன் – சொல்லத்தான் நினைக்கிறேன்
18. நான் பேச வந்தேன் – பாலூட்டி வளர்த்த கிளி
19. மலரே குறிஞ்சி மலரே – டாக்டர் சிவா
20. அந்தப்புரத்தில் ஒரு மகராணி – தீபம்
21. இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு – சிகப்பு ரோஜாக்கள்
22. நினைவோ ஒரு பறவை – சிகப்பு ரோஜாக்கள்
23. ஒரு வானவில் போலே – காற்றினிலே வரும் கீதம்
24. எங்கும் நிறைந்த இயற்கையில் – இது எப்படி இருக்கு
25. ஆழக்கடலில் தேடிய முத்து – சட்டம் என் கையில்
