எகிப்தில் சீனத் திரைப்படக் கண்காட்சி கெய்ரோவில் தொடக்கம்

Estimated read time 1 min read

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் எகிப்தில் அரசுமுறை பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு, சீனத் திரைப்பட நிர்வாகம் மற்றும் எகிப்து திரைப்படக் கவுன்சில் ஆகியவற்றின் ஆதரவுடன், சீன ஊடக குழுமம் எகிப்தில் நடத்திய பட்டுப்பாதையில் ஒளி மற்றும் நிழல் என்ற தலைப்பிலான சீனத் திரைப்படக் கண்காட்சி, செப்டம்பர் 1ஆம் நாள் கெய்ரோவில் தொடங்கியது.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் திரையிடப்படும் ஐந்து சீனத் திரைப்படங்கள், சீனத் திரைப்படத் துறையின் உயிராற்றலையும், புதிய யுகத்தில் சீனாவின் பன்முகத்தன்மையையும் வெளிப்படுத்துவதோடு, நாகரிகத் துறையில் சீனா-எகிப்து பரிமாற்றங்களையும் பரஸ்பர கற்றலையும் ஊக்குவிக்கின்றன.

Please follow and like us:

You May Also Like

More From Author