அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி 23ஆம் நாளன்று வெளியிட்ட பொருளாதாரம் தொடர்பான அறிக்கை ஒன்றின்படி, பொருளாதார நிச்சயமற்ற நிலை அதிகரித்து வருவதால் அமெரிக்காவின் பல பிரதேசங்களின் வளர்ச்சி எதிர்காலம் குறிப்பிட்ட அளவில் மோசமடைந்துள்ளது.
பொருளாதாரத்தின் வீழ்ச்சி அபாயம் குறித்து அமெரிக்கர்கள் பெரிதும் கவலையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதனிடையில் 22ஆம் நாளன்று, சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட உலகப் பொருளாதார முன்னாய்வு அறிக்கையில், 2025ஆம் ஆண்டில் அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சிக்கான எதிர்பார்ப்பு குறைக்கப்பட்டுள்ளது. இந்தக் குறியீடாது ஜனவரி திங்களில் இருந்ததை விட 0.9 சதவீத புள்ளிகள் சரிவு அடைந்தது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனின் பைனான்சியல் டைம்ஸ் சமீபத்தில் வெளியிட்ட கட்டுரை ஒன்றின்படி, அமெரிக்காவின் பொருளாதாரத் தவறுகள் அமெரிக்காவுக்கே பெரும் துன்பத்தைக் கொண்டு வரும் எனச் சுட்டியுள்ளது.
அமெரிக்க அரசின் சுங்க வரிக் கொள்கையால், அமெரிக்கா பொருளாதார வீழ்ச்சியில் சிக்கிக் கொள்வதற்கான சாத்தியம் 65 விழுக்காட்டை எட்டியுள்ளதாக அமெரிக்காவின் பீட்டர்சன் சர்வதேசப் பொருளாதார ஆய்வகத்தின் தலைவர் ஆதாம் போசன் தெரிவித்துள்ளார்.