தமிழ்நாட்டில் கோடைக்காலத்தை போல நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், வானிலை ஆய்வு மையம் அடுத்த சில தினங்களுக்கான வானிலை எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக, மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இயல்பை விட சுமார் 5 டிகிரி வரை வெப்பம் அதிகரித்துள்ளதால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் வரமுடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பை விட சுமார் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
40 டிகிரி வரை எகிறும் வெயில்: சென்னை மற்றும் மதுரையில் சுட்டெரிக்கும் வெப்பம்
