ஈரான் துறைமுகங்களுக்கு அமெரிக்கா மீண்டும் கடல்சார் முற்றுகை

Estimated read time 1 min read

ஈரான் துறைமுகங்கள் மற்றும் அதன் கடற்கரை பகுதிகளுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் கப்பல்களின் போக்குவரத்தை முடக்கும் வகையில், ஈரான் மீதான கடல்சார் முற்றுகையை அமெரிக்கா மீண்டும் அமல்படுத்தியுள்ளதாக அமெரிக்க இராணுவம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை வளைகுடா பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
CENTCOM வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த கடல்சார் முற்றுகை கிழக்கு நேரப்படி (ET) மாலை 4 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது.
இந்த ராணுவ நடவடிக்கையை வலுப்படுத்த, 20-க்கும் மேற்பட்ட அதிநவீன அமெரிக்க கடற்படைப் போர்க்கப்பல்களும், நூற்றுக்கணக்கான போர் விமானங்களும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் முழு வீச்சில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

You May Also Like

More From Author