ஜெனீவாவில் நடைபெற்ற சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தைக்கான கூட்டறிக்கை மே 12ஆம் நாள் வெளியிடப்பட்டது. இதற்கு, சர்வதேச சமூகம் பொதுவாக வரவேற்பு தெரிவித்துள்ளது.
இக்கூட்டறிக்கையின்படி, 91விழுக்காடு கூடுதல் சுங்க வரி விதிப்பை அமெரிக்கா ரத்து செய்துள்ளது. இதையடுத்து, சீனா அறிவித்துள்ள 91விழுக்காடு கூடுதல் சுங்க வரி விதிப்பையும் சீனா ரத்து செய்துள்ளது.
இதனால் உலகின் முக்கிய பங்குச் சந்தைகளில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் காணப்பட்டது. சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் இரு நாடுகளுக்கு மட்டுமல்ல, உலகின் பிற நாடுகளுக்கும் நம்மை பயக்கும் விதமாக உள்ளது.
பல்வேறு தரப்புகளின் எதிர்பார்ப்புக்கு ஏற்றதாக அமைந்துள்ளது என்று உலக வர்த்தக அமைப்பின் பொது இயக்குநர் இவேலா கூறினார்.
இப்பேச்சுவார்த்தை அமெரிக்காவின் அழைப்பையேற்று நடத்தப்பட்டது. இவ்வாண்டு ஏப்ரல் முதல் சீனா மீது அமெரிக்கா கூடுதல் வரி வசூலிப்பை அறிவித்து இதற்கு எதிரடி சுங்க வரி வசூலிப்பைச் சீனா மேற்கொண்டது வரை, இரு தரப்பின் முதலாவது நேருக்கு நேர் பேச்சுவார்த்தையாகும்.
இப்பேச்சுவார்த்தையின் சாதனைகள் அங்கீகாரிக்கப்பட வேண்டியவை. முன்னோடி செல்ல இரு தரப்புகள் தொடர்ந்து முயற்சி மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக வர்த்தக போர் தொடுப்பவரான அமெரிக்கா நல்லெண்ணம் மற்றும் செயலை மேற்கொண்டு சீனாவுக்கு எதிராக செயல்பட நிறுத்த வேண்டும். சர்வதேச சமூகம் எப்படி மாறினாலும், சீனா மேலாதிக்கத்துக்கு உறுதியாக எதிர்த்து நீதியைப் பின்பற்றி செயல்படுத்தும்.