ஈராக் தலைமையமைச்சர் சுடானி, 18ஆம் நாள், அந்நாட்டின் தலைநகர் பாக்தாத்தில், ஐ.நா தலைமைச் செயலாளர் ஆன்டோனியோ குட்டரேஸை சந்தித்துரையாடினார்.
இரு தரப்பு ஒத்துழைப்புகளை ஆழமாக்குதல், பிரதேசத்தின் புதிய முன்னேற்றம் ஆகியவை குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
ஈராக்கில் நடைபெற்ற 34ஆவது அரபு நாடுகள் லீக் உச்சிமாநாட்டில் குட்டரேஸ் கலந்துகொள்வதற்கு சுடானி நன்றி தெரிவித்தார். பல்வேறு நாடுகளின் மக்களின் உரிமையைப் பேணிக்காத்து, குறிப்பாக, பாலஸ்தீன இலட்சியம் குறித்து ஐ.நாவின் நிலைப்பாட்டிற்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.