அமைச்சர் துரைமுருகன் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கள் சர்ச்சையான நிலையில், சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.
அப்போது, நடிகர் விஜயின் கட்சிக் கொடி அறிமுகம் குறித்து கேளிவியெழுப்பியதற்கு, விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், துரைமுருகன் வயதான நடிகர்கள் ஓய்வு பெற்று இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் எனக் கூறியது குறித்து பேசிய ரஜினிகாந்த், ” துரைமுருகன் என்னுடைய நீண்ட கால நண்பர்.
எங்கள் இருவருக்கும் இடையே உள்ள நல்ல நட்பு தொடரும். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் என்ன சொன்னாலும் அதுகுறித்து எனக்கு வருத்தம் கிடையாது.” எனக் கூறினார்.