பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள எல் நினோ கடல் வெப்பநிலை மாற்றம், வரும் 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிப்பதற்கு 98 சதவீதம் வாய்ப்புகள் உள்ளதாக இந்திய தேசிய கடல் தகவல் சேவைகள் மையம் (INCOIS) எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஜூன் மாதமே தொடங்கிவிட்ட இந்த எல் நினோ தாக்கம், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் மேலும் தீவிரமடையும் என உலக வானிலை அமைப்பு கணித்துள்ளது.
இதனால் நடப்பு தென்மேற்கு பருவமழை, வரவிருக்கும் வடகிழக்கு பருவமழை மற்றும் குளிர்காலம் என மூன்று பருவங்களிலும் மிகப்பெரிய தலைகீழ் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன.
2027 மார்ச் வரை நீடிக்கும் சூப்பர் எல் நினோ! தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு வறட்சி அபாயம்
