2025 நோபல் பரிசு பெற்ற ஓமர் யாகியின் சிறப்பு பேட்டி

Estimated read time 1 min read

2026ஆம் ஆண்டு உலக செயற்கை நுண்ணறிவு மாநாடு மற்றும் உலகளாவிய ஏஐ நிர்வாகம் குறித்த உயர்மட்டக் கூட்டம் ஜுலை 17 முதல் 20ஆம் நாள் வரை ஷாங்காய் மாநகரில் நடைபெறுகின்றன. இம்மாநாட்டின் தொடக்க விழாவில் சீன அரசு தலைவர் ஷிச்சின்பிங் உரை நிகழ்த்தி, ஏஐ வளர்ச்சி மற்றும் நிர்வாகம் குறித்து சீனாவின் நிலைப்பாடுகளையும் கோட்பாடுகளையும் அறிமுகப்படுத்தினார். இந்த உரையை கேட்ட நோபல் பரிசு பெற்றவரும் சிங்குவா பல்கலைக்கழகப் பேராசிரியருமான ஓமர் யாகி அண்மையில் சீன ஊடக குழுமத்துக்கு சிறப்பு பேட்டியளித்தார்.

அவர் கூறுகையில், ஷிச்சின்பிங்கின் சிறப்புரை விரிவான தகவல்களைக் கொண்டு, முழுமையாக திட்டமிடப்பட்டுள்ளது என்றும், இது என் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்தார்.

அறிவியல் ஆராய்ச்சிக்குத் துணை புரியும் ஏஐ அதன் செயல்முறையை விரைவுபடுத்துவது மட்டுமல்லாமல், குறைந்த செலவில் சிறந்த செயல்திறன் கொண்ட பொருட்களைக் கண்டறியவும் உதவும் என்றும், இதன் மூலம் இறுதியில் பசுமையான மற்றும் தொடரவல்ல வளர்ச்சியை நனவாக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், சீனாவின் சிங்குவா பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் அவர், சீன மாணவர்கள் எப்போதும் தனக்கு  ஊக்கமளிப்பதாகவும் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author