ஒவ்வொருவரின் வீட்டிலும், அன்றாட வாழ்க்கையிலும் சமையல் கேஸ் உருளை முக்கியமான ஒன்றாகிவிட்டது. கிராமத்தில் வசிப்பவர்களும், நகரத்தில் வசிப்பவர்களும் கேஸ் சிலிண்டர் பயன்படுத்திச் சமையல் வேலைகளை வேகமாக முடிப்பதால், இல்லத்தரசிகளிடம் சிலிண்டர் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
கிராமம் மற்றும் நகரங்களில் வசிக்கும் மக்கள் சமையலுக்கு கேஸ் அடுப்பைப் பயன்படுத்திப் பழகி விட்டனர். இதனால், அரசு மற்றும் தனியார் கேஸ் சிலிண்டர் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. தனியார் நிறுவனம் வழங்கும் சிலிண்டர் விலையைவிட அரசு வழங்கும் சிலிண்டர் விலை மிகவும் குறைவு. இதனால், அரசு உருளைக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. மேலும், நாடு முழுவதும் உள்ள வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள பல கோடி மக்களுக்கு மத்திய அரசு இலவச கேஸ் சிலிண்டர் வழங்கி வருகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
குறிப்பாக, எல்பிஜி, சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி சிலிண்டர் ஆகியவற்றின் விலை ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
எஸ்பிஜி சிலிண்டர் நுகர்வோர் எண்ணிக்கை தற்போது 33 கோடியாக உள்ளது. விரைவில் மேலும் 75 லட்சம் சிலிண்டர்கள் வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் மானியம் இல்லாத எல்பிஜி வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை ரூ. 918.50 ஆக உள்ளது. இந்த நிலையில், சிலிண்டர் விலை ரூ.200 முதல் ரூ.300 வரை குறைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மத்திய அரசு வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது.