இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசிக்கு ஒப்புதல்..!!

Estimated read time 0 min read

இந்தியா உள்ளிட்ட 125 நாடுகளில் கொசுக்களால் பரவும் டெங்கு நோயானது, சுகாதார பணியாளர்களுக்கு பலத்த சவாலை ஏற்படுத்தி உள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கை எடுத்தாலும் இந்தியாவில் ஆண்டுதோறும் உயிரிழப்பு ஏற்பட்டு வந்தது. டெங்குவுக்கு இதுவரை எந்த தடுப்பூசியும் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில், ஜப்பானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தகேடா நிறுவனம் தயாரித்துள்ள கியூடெங்கா தடுப்பூசிக்கு டிசிஜிஐ எனப்படும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தடுப்பூசியை 4 முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்கு செலுத்தப்படும். இந்தியாவில் அங்கீகாரம் பெற்ற முதல் தடுப்பூசி என்ற பெருமை கியூடெங்காவுக்கு கிடைத்துள்ளது.

இந்த மருந்து 0.5 மில்லி லிட்டர் என்ற அளவில் மூன்று மாத இடைவெளியில் இரண்டு டோஸ்களாக தோல் வழியாக செலுத்தப்படும். இந்த மருந்து உலக சுகாதார அமைப்பின் சோதனையில் வெற்றி பெற்றுள்ளது. தரம்,பாதுகாப்பு, செயல்பாடு ஆகியவற்றில் உலக தரத்திற்கு இணையாக உள்ளது. இந்த மருந்தை பயன்படுத்த உலக சுகாதார அமைப்பும் பரிந்துரை செய்தது.

ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட கண்டங்களை சேர்ந்த 43 நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 3.2 டோஸ்கள் உலகம் முழுவதும் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. அர்ஜென்டினா,கொலம்பியா, இந்தோனேஷியா, பிரேசில் நாடுகளில் தேசிய தடுப்பூசி மருந்து திட்டத்தில் இந்தத் தடுப்பூசி இடம்பெற்றுள்ளது.சர்வதேச அளவில் இந்த தடுப்பூசி சோதனையில் கிடைத்த முடிவுகளை அடிப்படையாக வைத்து இந்தியாவில் ஒப்புதல் கிடைத்துள்ளது.

You May Also Like

More From Author