இவ்வாண்டில் சீனத் தயாரிப்புகளின் ஏற்றுமதி பெயர் பட்டியலில் மேலதிக புதிய பொருட்கள் இடம்பெற்றுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன், மின்சார வாகனம், லித்தியம் மின்கலம், சூரிய மின்கலம் ஆகியவை, ஏற்றுமதியில் சீனாவின் மேம்பாட்டுத் துறைகளாகும். இவ்வாண்டின் முற்பாதியில் இவற்றுக்கு மாற்றாக, இயந்திர மனிதன், செயற்கை நுண்ணறிவு, புதுமையான மருந்து ஆகியவை, சீன வெளிநாட்டு வர்த்தகத்தின் புதிய சின்னங்களாக மாறி வருகின்றன.
ஜுலை திங்களின் 3வது வாரத்தில், சீனாவின் செயற்கை நுண்ணறிவு பெரிய மாதிரியின் பயன்பாட்டு அளவு, 36.11 இலட்சம் கோடி டோக்கனை எட்டி, தொடர்ந்து 12 வாரங்களாக உலகின் முதலிடம் பிடித்துள்ளது.
இவ்வாண்டின் முற்பாதியில் இயந்திர மனிதர்கள், 141 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. மருத்துவ சிகிச்சைகளுக்கான இயந்திரங்களின் ஏற்றுமதி 3.3 மடங்கு அதிகரித்தது. வெளிநாடுகளுடனான புதுமையான மருந்துகளின் வர்த்தகத் தொகை சுமார் 11 ஆயிரம் கோடி டாலர் ஆகும். உலக மருத்துவ மற்றும் மருந்து வர்த்தகத்தில் முதல் 10 இடங்களில் சீனா 8வது இடத்தை வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
