கனடா பொருட்கள் மீது 50% வரி விதித்தார் அதிபர் டிரம்ப்

Estimated read time 0 min read

அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு உலக நாடுகள் பலவற்றுக்கும் வரிகளை அதிகம் விதித்துள்ளார்.

பல நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதியாகும் பொருட்களுக்கு முன்பிருந்ததை விட பல மடங்கு வரி விதித்துள்ளார்.

தற்போது அதிபர் டிரம்ப் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான பொருட்கள் மீது 50% கூடுதல் வரியை அதிரடியாக விதித்துள்ளார்.

இந்த 50% புதிய வரிகள் 30 நாட்களில் அமலுக்கு வரவுள்ளன. இதனால் ஒயின், ஹாக்கி மட்டைகள் மற்றும் வணிக சிமெண்ட் போன்ற பொருட்கள் பாதிக்கப்படுகின்றன.

இருப்பினும், எரிசக்தி பொருட்கள், பொட்டாஷ், மீன் மற்றும் முக்கியமான கனிமங்கள் ஆகியவற்றுக்கு இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளன.

வரும் வாரங்களில் அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளைத் தீவிரப்படுத்த கனடா தயாராக இருப்பதாகப் பிரதமர் மார்க் கார்னி பதிலளித்தார். இந்த கூடுதல் வரி விதிப்பு கனடாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல்கள் என்றும் பிரதமர் கார்னி தெரிவித்துள்ளார்.

கனடா காட்டுத்தீயின் புகை அமெரிக்க நகரங்களுக்குள் பரவுவது தொடர்பாக சுங்க வரிகளை விதிப்பதாக அதிபர் டிரம்ப் விடுத்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து, இந்த வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.

You May Also Like

More From Author