கோடைகால டாவோஸ் கூட்டத்தின் துவக்க விழாவில் சீனத் தலைமை அமைச்சர் உரை நிகழ்த்தினார்

Estimated read time 1 min read

 

சீனாவின் தியன்ஜின் மாநகரில் புதன்கிழமை நடைபெற்ற கோடைகால டாவோஸ் என அழைக்கப்படும் புதிய தலைவர்களின் 16ஆவது வருடாந்திர கூட்டத்தின் துவக்க விழாவில் சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் முக்கிய  உரை நிகழ்த்தினார்.

சர்வதேச பொருளாதார மற்றும் வர்த்தகம் ஆழ்ந்த மாற்றத்தை எதிர்கொள்கிறது என்று குறிப்பிட்ட அவர், சர்வதேச பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை மேற்கொள்வதில் பன்னாட்டு சமூகம் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். விரைவான பொருளாதார வளர்ச்சியைப் பராமரிப்பதில் சீனா நம்பிக்கை மற்றும் திறன் கொண்டுள்ளது என்றும், உலகப் பொருளாதாரம் எதிர்நோக்கும் இன்னல்கள் மற்றும் சவால்களை சமாளிக்க சீனா இயன்ற அனைத்தையும் செய்ய தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார். மேலும், மிகப்பெரிய நுகர்வு நாடாக வளரும் சீனா, உலகளவில் அசலான தொழில்நுட்பங்கள் மற்றும் புத்தாக்க ஆற்றலை பகிர்ந்துக் கொள்ள விரும்புவதாகவும், முதல்தர வணிகச் சூழலை சீனா தொடர்ந்து உருவாக்கி, திறப்புக் கொள்கையுடன் பல்வேறு நாடுகள் சீனாவில் முதலீடு செய்ய வரவேற்பதாகவும் லிச்சியாங் தெரிவித்தார்.

ஜுன் 24 முதல் 26ஆம் நாள் வரை நடைபெறும் நடப்பு கூட்டத்தில், 90க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 1700க்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர்.

You May Also Like

More From Author