சீனாவின் சர்வதேச போட்டியாற்றல் மேம்பாடுகளைக் கொண்ட சில தொழில்கள், இவ்வாண்டின் முற்பாதியில், வேகமாக வளர்ந்து வருகின்றன என்று சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 20ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. நுண்மதி நுட்ப இயந்திர மனிதர் துறையில், சீனா ஆராய்ந்து தயாரித்த நான்கு கால் ரோபோக்களின் விற்பனை அளவு, உலகளவில் சுமார் 70 விழுக்காடு வகிக்கிறது. மனித வடிவ ரோபோக்களின் வகை 400க்கும் மேலாகும். இதன் விற்பதனைத் தொகை உலகளவில் பாதிக்கும் மேல் ஆகும். சீனாவில் செயற்கை நுண்ணறிவு, குறைக்கடத்திகள், புதிய எரியாற்றல், உயிரின மருந்துகள் போன்ற துறைகளில், பல உலகளாவிய யூனிகார்ன் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அவை சர்வதேச வரையறை ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு, தொழில் மேலாண்மை முதலிய துறைகளில் சீனாவின் திட்டங்களை ஆக்கப்பூர்வமாக முன்வைத்து வருகின்றன.
படம்:VCG
