லாஃபெர்ட் எஸ்பிஏ உள்ளிட்ட 14 ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்களை ஏற்றுமதி கட்டுப்பாட்டு பட்டியலில் சேர்க்க முடிவெடுத்துள்ளதாக சீன வணிக அமைச்சகம் ஜூலை 24ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜூலை 23ஆம் நாளிரவு ஐரோப்பிய தரப்பு ரஷியா மீதான 21ஆவது சுற்று தடை நடவடிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு, சீனப் பெருநிலப்பகுதி மற்றும் ஹாங்காங்கைச் சேர்ந்த 14 நிறுவனங்களை தடை பட்டியலில் சேர்த்துள்ளது. இது குறித்து வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், நாட்டின் பாதுகாப்பு மற்றும் நலன்களைப் பேணிக்காக்கவும், அணு ஆயுத பரவல் தடுப்பு உள்ளிட்ட சர்வதேச பொறுப்புகளை நிறைவேற்றவும், ஐரோப்பிய தரப்பின் மோசமான செயலுக்கு எதிராக, சீன மக்கள் குடியரசின் ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டம், இரட்டை பயன்பாட்டு பொருட்களின் ஏற்றுமதி கட்டுப்பாட்டு விதிமுறை உள்ளிட்ட சட்ட விதிகளின்படி, கட்டுப்பாட்டு பட்டியலில் சேர்க்கபட்ட இந்த நிறுவனங்களுக்கு இரட்டை பயன்பாட்டுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படக் கூடாது என்றும், வெளிநாட்டு அமைப்புகள் அல்லது தனிநபர்கள் சீனாவில் தயாரிக்கப்பட்ட இரட்டை பயன்பாட்டுப் பொருட்களை இந்நிறுவனங்களுக்கு இடமாற்றம் செய்யவும் வழங்கவும் கூடாது என்றும் தெரிவித்தார்.
