இவ்வாண்டின் ஆகஸ்ட் திங்கள் இறுதி வரை, சீனாவில் 5G வலையமைப்பு நிலையங்களின் எண்ணிக்கை 40 லட்சத்து 42 ஆயிரத்தை எட்டியது. இது, செல்லிட நிலையங்களின் மொத்த எண்ணிக்கையில் 32.1 விழுக்காடு வகிக்கிறது. 5G செல்லிடபேசி பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 96.6 கோடியை எட்டியது.
இது செல்லிடபேசி பயன்பாட்டாளர்களின் மொத்த எண்ணிக்கையில் 54.3 விழுக்காடு வகிக்கிறது.
சீனாவில் வலைப்பின்னல் சேவை ஆற்றல் மேம்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருகின்றனர்.
மேலும் தரமான வலைப்பின்னல், மேலும் ஆழமாகவும் பரந்துபட்ட அளவிலும் சமூக வாழ்க்கையுடன் ஒன்றிணைந்துள்ளது. பொருளாதாரத்தின் டிஜிட்டல்மயமாக்கம், வலைப்பின்னல்மயமாக்கம் மற்றும் நுண்ணறிவுமயமாக்கத்தின் மாற்றத்துக்கு இது ஆற்றலை உட்புகுத்தியுள்ளது.
வலைப்பின்னல் அடிப்படை வசதிகளின் கட்டுமானத்தை வலுப்படுத்தி, 5G பயன்பாட்டு அளவை விரிவுபடுத்தி, 5G வலைப்பின்னலை சமூகம் மற்றும் மக்களின் வாழ்க்கைக்கு சீராக சேவை புரியச் செய்ய வேண்டும் என்று சீன தொழில் மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.