சீனாவில் சீரான வேளாண் மற்றும் கிராமப்புறப் பொருளாதாரச் செயல்பாடு

சீன அரசவையின் தகவல் பணியகம் ஜூலை 24ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், வேளாண் மற்றும் ஊரக விவகார அமைச்சகத்தின் பொறுப்பாளர் ஒருவர் கூறுகையில், இவ்வாண்டின் முற்பாதியில் வேளாண் மற்றும் கிராமப்புறப் பொருளாதாரம் நல்ல வளர்ச்சிப் போக்கை பராமரித்து, தேசிய பொருளாதாரத்தின் நிலையான முன்னேற்றத்துக்கு வலுவான ஆதரவு அளித்துள்ளது என்று தெரிவித்தார்.

கோடைகால தானிய உற்பத்தியில், தாமதமான பயிரிடுதல், மழைப்பொழிவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்ட போதிலும், 15074.5 கோடி கிலோகிராம் விளைச்சல் கிடைத்தது. கோடைகால தானிய விளைச்சல் 15000 கோடி கிலோகிராமுக்கு மேல் இருப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இலையுதிர்கால தானிய பயிரிடுதல் பரப்பளவு அதிகரிப்பு, வயல்களிலுள்ள தானிய பயிர்கள் சீரான வளர்ச்சி ஆகியவை, ஆண்டு முழுவதும் தானியங்களின் அமோக அறுவடைக்கு சிறந்த அடித்தளமாக அமைந்துள்ளன. தவிரவும், இவ்வாண்டின் முற்பாதியில் விவசாயிகளின் செலவழிக்கக்கூடிய வருமானம் 12699 யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதேகாலத்தை விட 5.5 விழுக்காடு அதித்துள்ளது.

You May Also Like

More From Author