உலகளாவிய நிர்வாக நண்பர்கள் குழுவின் அதிகாரப்பூர்வமான உருவாக்கத்தை ஜெனீவாவிலுள்ள சீனாவின் நிரந்தர பிரதிநிதிக் குழு அண்மையில் அறிவித்துள்ளது.
இது தொடர்பான கேள்விக்கு சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் மார்ச் 4ஆம் நாள் பதிலளிக்கையில், 2025ஆம் ஆண்டு செப்டம்பரில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த உலகளாவிய நிர்வாக முன்மொழிவு 150க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் அமைப்புகளின் ஆதரவுகளைப் பெற்றுள்ளது என்று குறிப்பிட்டார்.
உலகளாவிய நிர்வாக நண்பர்கள் குழு அடுத்தடுத்து நியூயார்க் மற்றும் ஜெனீவாவில் நிறுவப்பட்டு, குறுகிய காலத்தில் முன்னேற்றம் பெற்றுள்ளது. உலகளாவிய நிர்வாக முன்மொழிவு உலகின் தேவைக்கும் மக்களின் விருப்பத்துக்கும் பொருத்தமாக இருப்பதை இது முழுமையாக நிரூபித்துள்ளது.
தற்போது மனிதகுலத்தின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கான உன்னத லட்சியம் கடும் சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், முன்பை விட மேலும் பெரும் முயற்சியுடன் பலதரப்புவாதத்தைப் பேணிக்காத்து, சர்வதேச நீதி மற்றும் நியாயத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
ஒத்த நோக்கம் கொண்ட நாடுகள் இக்குழுவில் சேர சீனா வரவேற்பதோடு, சர்வதேச சமூகத்துடன் இணைந்து உலகளாவிய நிர்வாகத்தை மேம்படுத்தும் வழியை ஆராய்ந்து, ஒற்றுமையுடன் உலகளாவிய சவால்களைச் சமாளித்து, மனிதகுலத்துக்கான பொது எதிர்கால சமூகத்தை நோக்கி முன்னேறவும் விரும்புகிறது என்று அவர் தெரிவித்தார்.
