செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மிகவேகமாக வளர்ந்து வரும் நிலையிலும், பல வேலைகள் அதன் பிடியில் இருந்து தப்பித்துள்ளதாக ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
தங்களது கிளாட் ஏஐ கருவியின் பயன்பாட்டுத் தரவுகளைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில், சுமார் 22 தொழில் துறைகள் ஏஐயால் தானியங்கிமயமாக்கப்பட முடியாத நிலை உள்ளது.
ஏஐ தொழில்நுட்பத்தால் கோட்பாட்டு ரீதியாக பல வேலைகளைச் செய்யமுடியும் என்றாலும், நடைமுறையில் அதன் பயன்பாடு குறைவாகவே உள்ளது.
கணினி மற்றும் கணிதத் துறையில் தற்போது வெறும் 33 சதவீத வேலைகளுக்கு மட்டுமே கிளாட் பயன்படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இயந்திரக் கற்றலை விட மனிதர்களின் நேரடி ஈடுபாடு, உடல் உழைப்பு மற்றும் தனிப்பட்ட முடிவெடுக்கும் திறன் தேவைப்படும் இடங்களில் ஏஐ பின்தங்கியுள்ளது.
ஏஐயால் மாற்ற முடியாத 22 வேலைவாய்ப்புகள்: ஆந்த்ரோபிக் ஆய்வில் வெளியான வியப்பளிக்கும் தகவல்கள்
