தைவான் அதிகாரத்தின் தலைவர் லேய் தெச்சிங் அண்மையில் ஐ.நா பேரவையின் 2758 இலக்கு தீர்மானத்தைத் தவறாகத் திரித்து கூறி, தைவான் பிரிவினைவாதி என்ற அதன் சாராம்சத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் 8ஆம் நாள் கூறுகையில், தைவான் ஒரு தனி நாடு அல்ல, எதிர்காலத்திலும் அது சாத்தியம் இல்லை என்று தெரிவித்தார். ஐ.நா பேரவையின் 2758 இலக்கு தீர்மானத்தில் ஒரு சீனா என்ற கோட்பாட்டை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
