சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 22ஆம் நாள் பிற்பகல், சீனாவின் வடக்கிழக்குப் பகுதியில் உள்ள லியெள நிங் மாநிலத்தைச் சேர்ந்த ஹுலுதொவ் நகரில் உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று, கடந்த ஆண்டில் நிகழ்ந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பேரிடருக்குப் பிந்தைய சீரமைப்புப்பணியை நேரில் கண்ட அவர், கிராமவாசிகளின் புதிய வீட்டில், வீட்டின் தரம், அன்றாட வாழ்க்கைக்கான உத்தரவாதம் முதலியவற்றை அறிந்து கொண்டார்.