அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது புரட்சி பாரதம்

Estimated read time 0 min read

அ.தி.மு.க கூட்டணியில் இருந்து வெளியேறியதாக புரட்சி பாரதம் கட்சி அறிவித்துள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தை தொடர்ந்து புரட்சி பாரதம் கட்சியும் அதிமுக கூட்டணியிலிருந்து விலகியுள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, “அதிமுக உடனான கூட்டணி சட்டமன்றத் தேர்தலுடன் முடிந்துவிட்டது. நாங்கள் தற்போது எந்தக் கூட்டணியிலும் இல்லை. தவெக அரசின் செயல்பாட்டை இப்போதே விமர்சிக்க முடியாது. உள்ளாட்சி தேர்தலில் தவெகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து முடிவு செய்ய இன்னும் காலம் உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கும்போது கூட்டணி நிலைப்பாடு குறித்து முடிவு எடுக்கப்படும்” என்றார்.

You May Also Like

More From Author