பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காமல் 2வது நாளாக அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் புறக்கணித்துள்ளார்.
விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில், பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டிய மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் தலைவர் அன்புமணி பங்கேற்கவில்லை. கெளரவத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட ஒருசில நிர்வாகிகள் மட்டுமே கூட்டத்தில் கலந்துகொண்டனர். பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் வரவில்லை என கூறப்பட்டது.
இந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காமல் 2வது நாளாக அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் புறக்கணித்துள்ளார். இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பாமக இளைஞரணி கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தையும் அன்புமணி ராமதாஸ் புறக்கணித்துள்ளார். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தைப் புறக்கணித்த நிலையில், இளைஞரணி கூட்டத்திலும் அன்புமணி பங்கேற்கவில்லை.