“நண்பனுக்காக களமிறங்கிய பிரதமர் மோடி!”..

Estimated read time 1 min read

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பள்ளிக்கால நண்பரான அஸ்கர் அலி வோரா என்பவருக்குச் சொந்தமான நிலம் விவகாரம் ஒன்று தற்போது தேசிய அளவில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

கடந்த 1989-ஆம் ஆண்டு மும்பை நகரில் சுமார் 2,810 சதுர அடி பரப்பளவு கொண்ட நிலத்தை அவர் சட்டப்பூர்வமாக விலைக்கு வாங்கியிருந்தார். இதற்கிடையில், போலி ஆவணங்கள் மற்றும் முறையற்ற ஆதிக்கத்தைப் பயன்படுத்தி அந்த நிலத்தை பாஜக கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ நரேந்திர மேத்தா தன்வசப்படுத்தி ஆக்கிரமிப்பு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது.

சுமார் 15 ஆண்டுகளாகத் தீர்வு காண முடியாமல் நீடித்து வந்த இந்தச் சொத்துத் தகராறால் மனவேதனை அடைந்த அஸ்கர் அலி வோரா, நேரில் சென்று பிரதமர் மோடியைச் சந்தித்துத் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கூறி உதவி கோரியுள்ளார். தன் பள்ளிப்பருவ நண்பன் பட்ட கஷ்டத்தையும், அவனது சொத்து ஆக்கிரமிக்கப்பட்ட விபரங்களையும் கேட்டறிந்த பிரதமர் மோடி, உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகத் தெரிகிறது. இதன் விளைவாக, பல ஆண்டுகளாக இழுபறியில் இருந்த அந்த நிலப் பிரச்சினை அடுத்த சில மணி நேரங்களிலேயே சுமுகமாக முடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஒரு நாட்டின் உயரிய பதவியில் இருக்கும் பிரதமர் தனது பழைய நண்பரின் துயர் துடைக்கத் நேரடியாகத் தலையிட்டுத் தீர்வு பெற்றுத் தந்துள்ள இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது. பாஜகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரே இந்த ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருந்ததாக வெளிவந்த தகவல்களும், அதற்குப் பிரதமர் காட்டிய அதிரடி நடவடிக்கையும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரத் துஷ்பிரயோகத்திற்கு எதிராகத் தனிப்பட்ட முறையில் கிடைத்த இந்த உடனடி நீதி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பையும் ஆச்சரியத்தையும் பெற்றுத் தந்துள்ளது.

You May Also Like

More From Author