போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்பட்ட பிங்லு கால்வாய்

Estimated read time 1 min read

 

புதிய சர்வதேச தரை-கடல் வர்த்தக வழித்தடத்தின் முக்கியத் திட்டப்பணியான பிங்லு கால்வாய் 16ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்பட்டது. அதோடு, சீனாவின் நான்னிங் நகருக்கும் வியட்நாமின் கான் தோ நகருக்கும் இடையே வெளிநாட்டு வர்த்தக வழித்தடம், நான்னிங்கிற்கும் ஹைனான் மாகாணத்தின் யாங்பு நகருக்கும் இடையே உள்நாட்டு வர்த்தக வழித்தடம் ஆகிய இரண்டு புதிய சரக்கு போக்குவரத்து வழித்தடங்களும் இயக்கத்துக்கு வந்துள்ளன.

பிங்லு கால்வாய் கட்டுமானப் பணி 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் நாள் தொடங்கப்பட்டது. 134.2 கிலோமீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த கால்வாய் 5000 டன் கொண்ட கப்பல்களை தாங்கிச் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் இது சீனாவிலுள்ள மிக உயர்ந்த போக்குவரத்து திறனுடைய கால்வாய் என்பது குறிப்பிடத்தக்கது.

பிங்லு கால்வாய் புதிய சர்வதேச தரை-கடல் வர்த்தக வழித்தடத்துடன் இணைந்து, பல்வகை ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பை உருவாக்கி, பிரதேச பொருளாதார உயிராற்றலை ஊக்குவிக்கிறது. மேலும் நெருங்கிய சீனா-ஆசியான் பொது எதிர்கால சமூகத்தை உருவாக்குவதற்கு இது முக்கியத்துவம் வாய்ந்தது.

You May Also Like

More From Author