“17-வது இடத்திற்குத் தள்ளப்பட்ட தமிழகம்!” “74% சரிந்த முதலீடுகள்!”

Estimated read time 1 min read

தமிழகத்தில் தொழில் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வீழ்ச்சி குறித்து வெளியாகியுள்ள 2027-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான புதிய முதலீட்டுத் தரவுகள் அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

அண்டை மாநிலங்களில் புதிய அரசுகள் பொறுப்பேற்றவுடன் முதலீடுகள் பல மடங்கு உயர்ந்து சாதனை படைத்து வரும் நிலையில், தமிழகத்தில் தவெக அரசு பதவியேற்ற பிறகு ஒட்டுமொத்த முதலீடுகள் முந்தைய காலாண்டைக் காட்டிலும் 74.5 சதவீதமும், தனியார் முதலீடுகள் 77.63 சதவீதமும் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளன.

மாநிலத்தில் முன்மொழியப்பட்ட புதிய தொழில் திட்டங்களில் வெறும் ரூ. 11,237 கோடியை மட்டுமே ஈர்க்க முடிந்துள்ளதால், தேசிய அளவில் தமிழகம் பின்தங்கி 17-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, வெளிநாட்டுத் தனியார் முதலீடுகளும் ரூ. 2,080 கோடியிலிருந்து ரூ. 720 கோடியாகக் குறைந்திருப்பது பொருளாதார நிபுணர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் ஜோசப் விஜய் அவர்களிடம் போதிய தொலைநோக்குத் திட்டமிடல் இல்லாததும், புதிய முதலீட்டாளர்களைக் கவரும் வகையிலான உறுதியான தொழில் கொள்கைகள் அரசிடம் இல்லாததுமே இந்த வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

வெறும் விளம்பரப் பேச்சுகளாலும் சமூக வலைதளப் பதிவுகளாலும் மட்டும் தொழில்துறையை வளர்த்துவிட முடியாது என்பதைத் தவெக அரசு இந்தத் தரவுகள் மூலம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

“>

இல்லாவிட்டால், தமிழக இளைஞர்களின் எதிர்கால வேலைவாய்ப்புகள் கேள்விக்குறியாகிவிடும் என்பதால், அரசு உடனடியாகத் திறமையான தொழில் கொள்கைகளை வகுத்து முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

You May Also Like

More From Author