வைகாசி விசாகம் : வடபழனி முருகன் கோயிலில் கொடியேற்றம் கோலாகலம்!

Estimated read time 1 min read

வைகாசி விசாகத்தையொட்டி, சென்னை வடபழனி முருகன் கோயிலில் நடைபெற்ற கொடியேற்றத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக விடையாற்றி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது.

தொடர்ந்து அன்றைய தினம் இரவு 7 மணிக்கு வடபழனி ஆண்டவர் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன் பின்னர் மே 30-ஆம் தேதி நடைபெறும் வைகாசி விசாக திருவிழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

You May Also Like

More From Author