சீன அரசுத் தலைவரின் இணையரான ஃபெங் லியுவான் அம்மையரும் அமெரிக்க அரசுத் தலைவரின் இணையரான மெலானியா அம்மையாரும் 24ஆம் நாள் நண்பகல் அமெரிக்கத் தேசிய ஆசியக் கலை அருங்காட்சியகத்தில் பயணம் மேற்கொண்டனர்.
பயணத்தின்போது, ஃபெங் லியுவான் கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்கா சீனாவின் தொல் பொருட்களைத் திரும்பி அனுப்பியதற்குப் பாராட்டுத் தெரிவித்தார். அதோடு, இரு நாடுகளும் தொடர்ந்து பண்பாட்டுத் துறை பரிமாற்றத்தையும் கலாச்சார மரபுச் செல்வங்களின் பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பையும் வலுப்படுத்தி, இரு நாட்டு மக்களின் நட்புறவை அதிகரிக்க வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார்.
பயணத்துக்குப் பிறகு, இருவரும் அமெரிக்க இளம் மாணவர்களைச் சந்தித்து அன்பாகப் பேசினர்.
