சென்னை உட்பட 20 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை…. வானிலை எச்சரிக்கை….!! 

Estimated read time 1 min read

தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்குப் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து, மாநிலத்தின் பல பகுதிகளில் இதமான சூழ்நிலை நிலவி வருகிறது.

வானிலை மையத்தின் அறிவிப்பின்படி, தலைநகர் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய வடகடலோர மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் இன்று முதல் வரும் செப்டம்பர் 26-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நகரின் சில பகுதிகளில் விட்டுவிட்டு மிதமான சாரல் மழையும், சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும் என்பதால் மக்கள் கவனமுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அதேபோல, வரும் செப்டம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய உள் மாவட்டங்கள் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

You May Also Like

More From Author