2026ம் ஆண்டு பெய்ஜிங் பண்பாட்டுக் கருத்தரங்கு 22ம் நாள் பெய்ஜிங் மாநகரில் துவங்கியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும், பரப்புரைத் துறை அமைச்சருமான லீ ஷுலேய் இதில் கலந்து கொண்டு உரைநிகழ்த்தினார்.
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த உலக நாகரிக முன்மொழிவு, பண்பாட்டு மரபுச் செல்வத் துறையின் சர்வதேச ஒத்துழைப்பையும், மனித குலத்தின் பொது எதிர்காலச் சமூகத்தின் கட்டுமானத்தையும் முன்னெடுத்து, சீன மற்றும் உலக பண்பாட்டு மரபுச் செல்வங்கள் இலட்சியத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இத்துறையின் பாதுகாப்பை முழுமைப்படுத்தி, பல தரப்பு அமைப்பு முறையின் கீழ் பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவாக்க வேண்டும் என்று இக்கருத்தரங்கில் பங்கேற்ற விருந்தினர்கள் தெரிவித்தனர்.
படம் VCG
