ஷிச்சின்பிங்கின் அமெரிக்க பயணம் குறித்து சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்பு

Estimated read time 1 min read

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளதில் சர்வதேச சமூகம் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்த முறை சீன-அமெரிக்க அரசுத் தலைவர்களின் சந்திப்பு இரு தரப்பின் பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்தி, இரு நாடுகளுக்கும் ஏன் உலகிற்கும் பயனளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க தொழில் முனைவோர் மஸ்க் கூறுகையில், சீன அரசுத் தலைவர் ஒரு சிறந்த தலைவர் ஆவார். அவரது தலைமையில், சீனா மாபெறும் சாதனைகளைப் பெற்றுள்ளது. தெருக்களில் சாதாரணமாக நடக்கும் போதே, சீன குடிமக்கள் செழிப்பாக இருப்பதை காண முடிகிறது என்று தெரிவித்தார்.

அமெரிக்க-சீன உறவுத் தேசிய ஆணையத்தின் தலைவர் ஸ்டீபன் ஓர்லின்ஸ் கூறுகையில், வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறைகளில் இரு தரப்பும் சாதனைகளைப் பெற விரும்புவதாக தெரிவித்தார்.

You May Also Like

More From Author