“குறைப்பிரசவக் குழந்தைகளுக்கான அவசர மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை”- தமிழக அரசு

Estimated read time 1 min read

அரசு மருத்துவமனைகளில் குறைப்பிரசவக் குழந்தைகளுக்கான அவசர மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

குறைபிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளின் சுவாசம் சீரடையவும், நுரையீரல் சுருங்காமல் விரியவும் இந்த ‘சர்ஃபேக்டன்ட்’ மருந்து மிகவும் முக்கியமானது. இந்த மருந்து சிறப்பு மருந்துகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. ஆனால் இந்த மருந்துக்கு அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடு நிலவுவதாகவும், தேனி, தருமபுரி, திருப்பூர், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், கரூர், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இந்த மருந்துகளுக்கான தட்டுப்பாடு நிலவுவதாகவும் செய்திகள் வெளியானது. மருந்துகளின் தேவை, இருப்பு என்ன என்பது குறித்த கணக்கை சரியாக எழுதி வைத்து ஆர்டர் செய்யாததே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. இதனால் சில மருத்துவமனைகளில் குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான நிதியை பயன்படுத்தி தனியாரிடம் அதிக விலை கொடுத்து வாங்கியோ அல்லது பிற மருத்துவமனைகளில் வாங்கியோ குழந்தைகளின் உயிரை காப்பாற்றி வருகிறார்கள் என்றும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் அரசு மருத்துவமனைகளில் குறைப்பிரசவக் குழந்தைகளுக்கான அவசர மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை, குறைப்பிரசவ குழந்தைக்கு வழங்கும் ‘சர்ஃபாக்டண்ட்’ மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. குழந்தைகளுக்கு தரமான, பாதுகாப்பான மருத்துவச் சிகிச்சையை உறுதி செய்ய அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.

You May Also Like

More From Author