சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு கூட்டம்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு கூட்டம் ஜூலை 30ம் நாள் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் தலைமை தாங்கினார்.

கூட்டத்தின் முடிவின்படி, சீன கம்யூனிஸ்ட் கட்சி 20ஆவது மத்திய கமிட்டியின் 5ஆவது முழு அமர்வு இவ்வாண்டின் அக்டோபர் திங்களில் பெய்ஜிங் மாநகரில் நடைபெற உள்ளது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு, மத்திய கமிட்டியிடம் பணியறிக்கையை வழங்துவது, கட்சியைக் கண்டிப்பான முறையில் ஒழுங்கு செய்வதை நிரந்தரமாகவும் பன்முகங்களிலும் வலுப்படுத்துவதை ஆராய்ச்சி செய்வது உள்ளிட்டவை இக்கூட்டத்தின் முக்கிய நிகழ்ச்சி நிரல்களாகும். நடப்பு கூட்டத்தில் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இவ்வாண்டின் பிற்பாதியில் பொருளாதாரப் பணியும் இதில் ஏற்பாடு செய்யப்பட்டது.

You May Also Like

More From Author