பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ அக்.11-ல் திறப்பு

Estimated read time 1 min read

வடபழனி-பூந்தமல்லி இடையேயான மெட்ரோ ரயில் சேவையை அக்.11ல் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ், பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான 14.6 கி.மீ நீளமுள்ள வழித்தடத்தைத் தொடங்கிவைப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி 2026-ஆம் ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதி சென்னைக்கு வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூந்தமல்லி முதல் போரூர் வரை பிரதமர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இதே பயணத்தின் போது, புதிதாக மேம்படுத்தப்பட்டுள்ள வேலூர் விமான நிலையம் பிரதமர் மோடி திறந்து வைக்கக்கூடும் எனப் பேசப்படுகிறது. பூந்தமல்லி முதல் போரூர் வரை மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய்தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடி முதன்முறையாக தமிழ்நாடு வருகிறார்.

You May Also Like

More From Author