“யாரும் எதிர்பார்த்திராத நிகழ்வு நடைபெற்ற நாள்”- என். ஆனந்த்

Estimated read time 1 min read

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததன் ஓராண்டு நினைவுநாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

இதனையொட்டி அமைச்சர் ஆனந்த் தனது எக்ஸ் தளத்தில், “கடந்த ஆண்டு இதே நாள், மக்கள் விரும்பும் மாண்புமிகு முதலமைச்சர் விஜய், தமிழக மக்களுக்கு ஆலமரமாகத் திகழும் வெற்றித் தலைவர் அவர்களுக்கும், அந்த ஆலமரத்தின் நிழலாய்த் தொடரும் கோடிக்கணக்கான ரசிகர்கள், வெற்றித் தலைவர் அவர்களின் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ்நாட்டு மக்கள் உள்ளிட்ட அனைவரது நெஞ்சங்களிலும் தீரா வலி ஏற்பட்டு, அழியாச் சுவடு உருவான நாள்! மாற்றத்தை உருவாக்க நினைத்து, மக்கள் நலன் காக்கத் துணிந்த மக்கள் தலைவரின் பயணத்தில், யாரும் எதிர்பார்த்திராத நிகழ்வு நடைபெற்ற நாள்! தமிழக மக்களின் விடிவெள்ளியாய்த் திகழும் நம் வெற்றித் தலைவர் அவர்களின் நெஞ்சில் குடியிருக்கும் நம் இரத்த சொந்தங்களைப் பிரிந்து ஓராண்டாய்த் தவிக்கும் நம்மை வாரி அனைத்து ஆறுதல் சொல்ல, அவரன்றி, வேறொருவர் உண்டோ? நம் கரூர் சொந்தங்களே!இந்நாளில், நம் நெஞ்சில் குடியிருக்கும் பிரிந்த நம் சொந்தங்களுக்கு வெற்றித் தலைவர் அவர்களின் வழியில் எனது மலரஞ்சலியை காணிக்கையாக்குகின்றேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

More From Author