3 மாதங்களில் 5.95 பில்லியன் டாலர் FD…அந்நிய முதலீட்டில் தமிழ்நாடு முதலிடம்!

Estimated read time 1 min read

சென்னை : தமிழ்நாடு அசுர வேகப் பொருளாதார வளர்ச்சியோடு, 2026-27 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் – ஜூன்) 5.95 பில்லியன் அமெரிக்க டாலர் அந்நிய நேரடி முதலீடுகளை (FDI) அதிரடியாக ஈர்த்து ஒட்டுமொத்த இந்தியாவிலேயே முதலிடம் பிடித்து ஒரு மாபெரும் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. முதலமைச்சர் விஜய் சமீபத்தில் லண்டன் சென்றது வெறும் இன்பச் சுற்றுலா என்று எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் விமர்சித்து வந்த நிலையில், தற்பொழுது மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த அதிகாரப்பூர்வப் புள்ளிவிவரங்கள் ஆளும் தவெக அரசின் தொழில்துறை முன்னேற்றத்திற்கு ஒரு மிகப்பெரிய சான்றாக அமைந்துள்ளது.

மத்திய அரசின் அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் ஒட்டுமொத்த இந்தியாவிற்குள் வந்த மொத்த அந்நிய நேரடி முதலீடுகளில், தனி ஒரு மாநிலமாக நம்ம தமிழ்நாடு மட்டுமே 30 சதவீதப் பங்கை (30% Share) மிக அசால்ட்டாகத் தன்வசப்படுத்தி முதலிடத்தைச் சிம்மாசனமிட்டு அலங்கரித்துள்ளது.

கடந்த 2025-26 ஆம் நிதியாண்டின் இதே ஏப்ரல் – ஜூன் காலாண்டில் தமிழ்நாட்டின் அந்நிய முதலீடு வெறும் 2.7 பில்லியன் அமெரிக்க டாலராக மட்டுமே முடங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தவெக அரசு கையாண்ட சிறப்பான உலகளாவிய முதலீட்டாளர் உத்திகள் காரணமாக, தற்பொழுது கடந்த ஆண்டை விட இரண்டு மடங்குக்கும் மேலாக (Double) முதலீடுகள் அதிரடியாக உயர்ந்து, ஒட்டுமொத்தமாக 5.95 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டிப் புதிய உலகச் சாதனை படைத்துள்ளது.

முதலாவதாக, இந்தியாவின் முன்னணி நிதி நிறுவனமான ஸ்ரீராம் ஃபைனான்ஸ் மற்றும் ஜப்பானின் மிகப்பெரிய ராட்சத வங்கியான எம்யுஎஃப்ஜி (Shriram Finance – MUFG Deal) ஆகியவற்றுக்கு இடையே தமிழ்நாட்டில் கையெழுத்தான மெகா நிதி ஒப்பந்தம் இந்த காலாண்டில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாவதாக, தமிழ்நாட்டின் ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பிரீமியம் பைக், கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் உற்பத்தித் துறையானது (Manufacturing Sector) முன்னெப்போதையும் விட தற்பொழுது அசுர வேகத்தில் இயங்கி வருவது உலக நாடுகளைத் தமிழ்நாட்டை நோக்கிச் சுண்டி இழுத்துள்ளது.

மூன்றாவதாக, சென்னை மற்றும் கோயம்புத்தூரில் தவெக அரசு அமைத்துக் கொடுத்துள்ள உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகள் காரணமாக, பான்-இந்திய அளவில் உலகளாவிய திறன் மையங்கள் எனப்படும் ஜிசிசி (Global Capability Centres – GCC) நிறுவனங்கள் தங்களது மெகா முதலீடுகளைத் தமிழ்நாட்டில் வாரி இறைத்துத் தங்களது பிராந்திய கிளைகளை அமைத்து வருகின்றன.

You May Also Like

More From Author