சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே 8 சாதனைகள் மற்றும் பொது கருத்துக்கள்

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்,  உள்ளூர் நேரப்படி செப்டம்பர் 23 முதல் 25ஆம் நாள் வரை, அமெரிக்காவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டார். இப்பயணத்தின்போது, சீன-அமெரிக்க இடையேயான ஆக்கப்பூர்வமான நெடுநோக்கு சார்ந்த நிலையான உறவுகள் குறித்தும், முக்கிய சர்வதேச மற்றும் பிரதேச விவகாரங்கள் குறித்தும் இரு நாட்டு அரசுத் தலைவர்கள் கருத்துக்களை ஆழமாகப் பரிமாற்றி,  8 சாதனைகள் மற்றும் பொது கருத்துக்களை எட்டினர்.

முதலாவதாக, மரியாதை, நியாயம், பரஸ்பர சமத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில், ஆக்கப்பூர்வமான நெடுநோக்கு சார்ந்த நிலையான உறவைக் கட்டியமைக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

இரண்டாவதாக, இரு தரப்புகளும் ஒன்றுக்கொன்று ஆதரவளித்து, ஏபெக் உச்சிமாநாடு மற்றும் ஜி20 உச்சிமாநாட்டை வெற்றிக்கரமாக நடத்த  இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

மூன்றாவதாக, அணு ஆயுதங்களை உருவாக்க போவதில்லை என்ற வாக்குறுதியை ஈரான் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், எந்த நாடும் அல்லது நிறுவனமும் சர்வதேச கடல்வழி பாதைகள் மீது கட்டணம் வசூலிக்கக்கூடாது என்றும் இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர்.

நான்காவதாக, 2வது உலகப் போரில் கூட்டணி நாடுகளான சீனாவும் அமெரிக்காவும் முழு ஒத்துழைப்புகளுடன் செயலாற்றி, போரில் பெற்ற வெற்றியை இரு நாட்டு அரசுத் தலைவர்களும் நினைவு கூர்ந்தனர்.

ஐந்தாவதாக, சீன-அமெரிக்கப் பொருளாதாரம் மற்றும் வர்த்தக கலந்தாய்வு அமைப்புமுறையின்  ஆக்கப்பூர்வமான பங்குகளையும், இரு தரப்புப் பொருளாதாரம் மற்றும் வர்த்தக குழுக்கள் கலந்தாய்வுகளின் மூலம் பெற்றுள்ள சாதனைகளையும் இரு நாட்டு அரசுத் தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

ஆறாவதாக, சீன-அமெரிக்க போதைப்பொருள் தடுப்புக்கான சட்ட அமலாக்கத் துறைகளின் ஒத்துழைப்பு காணக்கூடிய சாதனைகளைப் பெற்றுள்ளன.

ஏழாவதாக, செயற்கை நுண்ணறிவு பற்றிய இடர்ப்பாடுகள் மற்றும் நலன்கள் குறித்து பரிமாற்றம் செய்யும் விதம், சீன-அமெரிக்க செயற்கை நுண்ணறிவு பேச்சுவார்த்தையை உருவாக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். இதுகுறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நவம்பர் திங்களில் நடைபெறவுள்ளது.

எட்டாவதாக, அமெரிக்காவின் அட்லாண்டா விலங்கியல் பூங்காவுக்கு சீனா குத்தகை முறையில் வழங்கிய ஒரு ஜோடி பாண்டாக்கள் விரைவில் அமெரிக்காவை வந்தடைய உள்ளதற்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்தது.

தவிரவும், நெருக்கடிகள் பற்றிய தொடர்பு மற்றும் தடுப்புக்கான புரிந்துணர்வு குறிப்பாணையில் வெகுவிரைவில் கையொப்பமிட வேண்டும் என்றும் இரு நாட்டுப் படைகள் ஒப்புக்கொண்டன.

You May Also Like

More From Author