செங்கோட்டை வரலாற்றில் முதன்முறையாக தேசியக் கொடியேற்றத்தின் போது முழுமையாக ஒலித்த வந்தே மாதரம் பாடல்  

Estimated read time 0 min read

இந்தியாவின் 80வது சுதந்திர தின விழாவில் டெல்லி செங்கோட்டையில் வரலாற்றில் முதன்முறையாக வந்தே மாதரம் தேசியப் பாடல் முழுமையாக இசைக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றியதைத் தொடர்ந்து, வழக்கமாகப் பாடப்படும் ஜன கண மன தேசிய கீதத்திற்கு முன்பாக ராணுவ இசைக் குழுவினரால் வந்தே மாதரம் பாடல் முழுமையாக இசைக்கப்பட்டது.
இப்பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் வகையில் இந்த வரலாற்று சிறப்புமிக்க மாற்றம் செங்கோட்டை விழாவில் கொண்டுவரப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author