ஜப்பானின் அரசியல்வாதிகள், முதல் நிலை போர் குற்றவாளிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் யசுகுனி கல்லறையில் அஞ்சலி செலுத்துவது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த போது கூறுகையில், ஆகஸ்டு 15ஆம் நாள், ஜப்பான் 2வது உலகப் போரில் தோல்வி மற்றும் சரணடைந்ததை நினைவு கூரும் தினமாகும். யசுகுனி கல்லறை பற்றிய ஜப்பானின் செயல்களுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்ததோடு, ஜப்பானுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது என்றார்.
மேலும், யசுகுனி கல்லறை, ஜப்பானின் இராணுவவாதத்தின் கருவியாகவும், அடையாளமாகவும் திகழ்கிறது. அங்கு புணிதப்படுத்தப்பட்ட 14 முதல் நிலை போர் குற்றவாளிகள், சீனா மீது ஆக்கிரமிப்புப் போரைத் தொடுத்தனர். ஜப்பானின் தவறான செயல்கள், வரலாறு மற்று நீதியை இழிவுபடுத்து, போருக்குப் பிந்தைய சர்வதேச ஒழுங்கை ஆத்திரமூட்டல் செய்தது என்றும் அவர் தெரிவித்தார்.
தவிரவும், ஜப்பான், தனது ஆக்கிரமிப்பு வரலாற்றை ஆழமாகத் சுயபரி சோதனை செய்து, இராணுவவாதத்தை முற்றிலும் கைவிட்டு, நடைமுறை செயல்களின் மூலம், ஆசிய ஆண்டை நாடுகள் மற்றும் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையைப் பெற வேண்டும் என்று சீனா வேண்டுகோள் விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
