அமெரிக்க நிறுவனங்கள் உள்ளிட்ட சீனாவில் உள்ள அன்னிய நிறுவனங்கள், அடுத்த சில ஆண்டுகளில் சீனாவில் தங்களின் அலுவல்களை அதிகரிக்கவும், அதிகமான லாபங்களை மறுமுதலீட்டில் பயன்படுத்தவும் விருப்பம் தெரிவித்துள்ளதாக தென் சீனாவில் உள்ள அமெரிக்க வர்த்தக சங்கம் அண்மையில் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டின் அக்டோபர் 11ஆம் நாள் முதல் டிசம்பர் 23ஆம் நாள் வரை இந்த சங்கம் தென் சீனாவில் உள்ள 316 உறுப்பு நிறுவனங்களில் கருத்துக்கணிப்பு நடத்தியது.
இந்த நிறுவனங்களில், 34% அமெரிக்க நிறுவனங்கள், 25% சீனாவின் உள் நிலப்பகுதி, 17% ஹாங்காங் மற்றும் மக்கெளவைச் சேர்ந்தவை, 14% ஐரோப்பாவைச் சேர்ந்தவை, 10% மற்ற நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் ஆகும்.
கருத்துக்கணிப்பின் முடிவுக்கு இணங்க, சீனாவில் நடைபெறும் அலுவல்களையும் சந்தை அளவையும் வரிவாக்கம் செய்யும் வகையில், சீனாவில் பெறப்படும் லாபத்திலிருந்து 1459கோடி அமெரிக்க டாலரை அடுத்த 3முதல் 5ஆண்டுகளுக்குள் மறுமுதலீட்டில் பயன்படுத்த உள்ளதாக இந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தொகை, கடந்தமுறை நடைபெற்றகருத்துகணிப்பை விட 33.18சதவீதம் அதிகரித்தது. 57சதவீத அமெரிக்க நிறுவனங்கள் கடந்த ஆண்டில் சீனாவில் மறுமுதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளன. சுமார் 90சதவீத அமெரிக்க நிறுவனங்கள், கடந்த ஆண்டில் சீனாவில் லாபம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளன.
மறுமுதலீட்டில் கணிசமான அதிகரிப்பு, சீனச் சந்தைக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் மீண்டும் நம்பிக்கையை பெற்றுள்ளன என்பதை காட்டியுள்ளது என்று ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.