அக்.15 முதல் தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கும்; வானிலை ஆய்வு மையம்

Estimated read time 0 min read

நடப்பு ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ஆம் தேதி முதல் 21ஆம் தேதிக்குள் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தலைவர் மொஹாபத்ரா தெரிவித்துள்ளார்.

சென்னை பள்ளிக்கரணையில் உள்ள தேசிய கடல்வளம் தொழில்நுட்ப கழகத்தில் வடகிழக்கு பருவமழை பருவகால முன்னறிவிப்பு தொடர்பான உயர்மட்டக் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் மொஹாபத்ரா மற்றும் தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் சந்திரமோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் பேசிய இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் மொஹாபத்ரா, தென் தீபகற்ப இந்தியாவில் இந்த ஆண்டு இயல்பான மழைப்பொழிவு இருக்கும் எனவும், தென் தமிழ்நாடு, தென்மேற்கு தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய கடலோர மாவட்டங்கள் மற்றும் கேரள மலைப் பகுதிகளில் இயல்பான அளவை விடக் கூடுதலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.

You May Also Like

More From Author