ரஷ்யா மற்றும் ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிப்பது தொடர்பாக, இந்தியாவின் நலன்கள் மற்றும் கவலைகளை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவிடம் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் எடுத்துரைத்துள்ளார்.
ஐ.நா. சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் சென்றுள்ள ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவை சந்தித்து பேசியுள்ளார்.
இந்தச் சந்திப்பு தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜெய்சங்கர், ரஷ்யா மற்றும் ஈரான் மீதான தடைகள் தொடர்பாக இந்தியாவின் நலன்கள் மற்றும் கவலைகளை எடுத்துரைத்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், வளைகுடா மற்றும் உக்ரைன் நிலவரங்கள் குறித்தும் இருவரும் விவாதித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
