போக்சோ வழக்கில் கைதான ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
ஜெம் கிரானைட்ஸ்’ (Gem Granites) நிறுவனத்தைச் சேர்ந்த ஆர். வீரமணி மற்றும் அவரது கூட்டாளிகளான மகேந்திர சிம்மன், அவரது மனைவி சாந்தி ஆகியோருக்கு எதிரான வழக்கை விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் (SIT) நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சென்னை காவல் ஆணையர் ஏ. அமல்ராஜ் பிறப்பித்த உத்தரவின் பேரில் அவர்கள் மூவரும் வியாழக்கிழமையன்று குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். சென்னை காவல் ஆணையர் உத்தரவின் பேரில் 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான ஜெம் வீரமணி சிறையில் அடைக்கப்பட்டுள்ளது.
