அக்டோபர் 1-ல் தங்கம், வெள்ளி விலை அதிரடி சரிவு!

Estimated read time 1 min read

அமெரிக்க டாலர் மதிப்பு, உலக நாடுகளிடையேயான போர், பொருளாதார மாற்றங்கள் உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் உலக சந்தையில் தங்கம் விலை நிலையற்ற தன்மையில் காணப்படுகிறது.

கடந்த வாரத்தில் பெரும்பாலும் தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், மாத கடைசி நாளான இன்று சற்று அதிகரித்திருக்கிறது. எனினும் இந்த விலையேற்றம் தொடருமா என்பது சந்தேகம் தான்.

நேற்று (செப்டம்பர் 30) தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.70 உயர்ந்து ரூ.13,710-க்கும், ஒரு சவரன் ரூ.560 உயர்ந்து ரூ.1,09,680-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை 1 கிராம் ரூ.5 உயர்ந்து ரூ.245-க்கு விற்பனையானது.

தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (அக்டோபர் 1) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.30 குறைந்து ரூ.13,680-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.240 குறைந்து, ரூ.1,09,440-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.240-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,40,000-க்கு விற்பனையாகிறது.

You May Also Like

More From Author