தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் பயிற்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனுக்காக, மாநில அரசு அதிரடியாக மாதாந்திர ஊக்கத்தொகையை உயர்த்தி அறிவித்துள்ளது.
அதன்படி, முழுநேரமாகப் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாத ஊக்கத்தொகை இந்த ஆண்டில் ரூ.4,000 லிருந்து ரூ.10,000 ஆகவும், பகுதி நேர மாணவர்களுக்கு ரூ.2,000 லிருந்து ரூ.5,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த உயர்வு மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ், தமிழகம் முழுவதும் மொத்தம் 18 பயிற்சிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
தமிழகத்தில் இந்த பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாத ஊக்கத்தொகை ரூ.10,000
