வங்கி கணக்கு வைத்திருப்பவர் இறந்தால் பணம் யாருக்கு? – RBI வழிகாட்டுதல்

Estimated read time 0 min read

வங்கி கணக்கு வைத்திருப்பவர் இறந்தால் பணம் யாருக்கு? என ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.

கணக்கு வைத்திருப்பவர் இறந்த பிறகு, நியமனதாரர் அல்லது உரிமை கோருபவர் வங்கியில் விண்ணப்பிக்க வேண்டும். வங்கி கிளை அல்லது இணையதளத்தில் உரிமை கோரும் படிவத்தைப் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். உரிமைக் கோரிக்கை 15 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும். கணக்கில் நியமனதாரர் இருந்தால், பணத்தைப் பெறும் நடைமுறை மேலும் எளிதாகவும் விரைவாகவும் இருக்கும். குடும்பத்தினரின் உரிமை கோரும் நடைமுறையை எளிதாக்க, வங்கிக் கணக்கில் நியமனதாரர் விவரங்களைப் பதிவு செய்யவும் இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

You May Also Like

More From Author