சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தியேன் ஜின் உச்சிமாநாட்டில் பங்கெடுத்த ஈரான் அரசுத் தலைவர் பெசெஷ்கியன், அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், சீனத் தலைவர்களின் தலைமையில் ஒற்றுமை மற்றும் இணக்கமான வளர்ச்சி பாதையில் சீனா நடைபோட்டு வருகிறது. சீனாவின் வளர்ச்சி திட்டங்கள், தெளிவான இலக்குடன் அறிவியல்பூர்வமாகத் திகழ்கின்றன. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த உலகளாவிய ஆட்சி முறை முன்மொழிவில், சர்வதேச சட்ட ஒழுங்கு இடம்பெறுகிறது. சர்வதேச சட்டங்களுக்கு இரட்டை வரையறைகள் இருக்கக் கூடாது. மக்கள் அனைவரும் சமமான உரிமைகளை அனுபவிக்க வேண்டும். அமைதியை நனவாக்கும் வகையில், பல்வேறு நாடுகள் ஒற்றுமையுடன் ஒத்துழைத்து, தத்தமது உரிமை பிரதேச ஒருமைபாட்டை மதித்து, ஒன்றுடன் ஒன்று பரிமாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
சீனா, சர்வதேச சமூகத்தில் அதிக செல்வாக்கு வாயந்த நாடாகும். மத்திய கிழக்கு பிரதேசத்தில், சீனா மேலும் வலுவான மற்றும் விரிவான பங்காற்ற வேண்டும் என அவர் விருப்பம் தெரிவித்தார்.