மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025 தொடருக்கான ஒளிபரப்பு மற்றும் நேரடி ஸ்ட்ரீமிங் கூட்டாளர்களின் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தப் பிரமாண்டமான தொடர், உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்குப் பல வழிகளில் சென்றடைய உள்ளது.
இந்த ஆண்டின் உலகக் கோப்பையை இந்தியா நடத்துகிறது. முதல் போட்டியில் இந்தியா மகளிர் அணியை இலங்கை மகளிர் அணி எதிர்கொள்கிறது.
இந்தியாவில் நடைபெறும் போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மூலம் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
போட்டிகளை ரசிகர்கள் ஜியோஹாட்ஸ்டார் செயலி மற்றும் இணையதளம் மூலம் நேரலையில் காணலாம்.
போட்டிகள் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வர்ணனையுடன் ஒளிபரப்பப்படும்.
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை ஒளிபரப்பு மற்றும் ஸ்ட்ரீமிங் விவரங்களை வெளியிட்டது ஐசிசி
